Sunday 25 July 2010

தேடல்

சின்னஞ் சிறு அறை
சுற்றிலும் இருட்டு
சுவாசிக்க வழியில்லை
சுவாசிக்கவும் தோன்ற வில்லை
எங்கும் நிசப்தம்
தனிமையைத் தவிர
வேறு துணை இல்லை
ஆனாலும் பயமேதும் அறிய வில்லை
உண்ணவழியில்லை
ஆனால் பசி அறியவில்லை
உறங்க வசதியில்லை
ஆனாலும் உறக்கத்தை தவிர
வேறு சிந்தையில்லை
உடுத்த உடையில்லை
அது பற்றி கவலையில்லை
இந்த நிலை என்று மாறும்
என்ற ஏக்கம் என்றும் இல்லை
அழுதோ சிரித்தோ பழகவில்லை
அதையும் தாண்டி ஒரு மோனநிலை !
சட்டென்று ஒரு கணத்தில்
விழியை ஒளியும்
செவியை ஒலியும்
நாசியை சுவாசமும் தீண்ட ...
அழுது கொண்டே விழுகிறேன்
வாழ்க்கை பள்ளத்தில் ..
விழுந்து கொண்டே தேடுகிறேன் ....

எங்கே அந்த சின்னஞ் சிறு அறை ??!!...
என் தாயின் கருவறை !