Friday 24 September 2010

இறைவன்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் !!!
இறைவன் இன்று வரை இந்த உலகில் இல்லை
என்பதற்கு இதுவல்லவா சாட்சி !!!

Thursday 23 September 2010

வறுமை

இல்லாததா வறுமை
இல்லை இல்லை
நிறைய இருப்பதுதான் வறுமை
வயிறு நிறைய பசி
உடல் நிறைய சோர்வு
உள்ளம் நிறைய கலக்கம்
விழி நிறைய உறக்கம்
உறக்கம் நிறைய கனவு
கனவு நிறைய ஏக்கம்
வீடு நிறைய வெறுமை
வெறுமை நிறைந்த வாழ்க்கை
இல்லாததா வறுமை
இல்லை இல்லை ..
நிறைய இருப்பதுதான் வறுமை !!!




திறந்த வெளியில்
பரந்த வானமே போர்வையாக
குளிர்ந்த காற்று தாலாட்ட
நிலவின் மங்கிய ஒளியில்
இயற்கையின் மடியில்
நிறைந்த மனதோடு
உழைத்து களைத்த உடலோடு
அயரும் விழிகள்
எந்த கோடீஸ்வரனுக்கு
சொந்தம் ?


வறுமையை ஒழிப்போம் !
உரக்க கத்திக்கொண்டு ஓர் ஊர்வலம்
அரசியல்வாதியின் தலைமையில் !
வீதியோர வாசிகளை விரட்டியடித்தது போலீஸ்
ஊர்வலத்தை பாதுகாக்க !!!


Wednesday 4 August 2010

திருமணம்

இன்றைய திருமணம்
விவகாரத்திற்காக ஒரு விவாகம் !
விவாகரத்திற்கான ஒரு முன்னேற்பாடு !

முரண்பாடு

எமனின் கையில் இருப்பது
பாசக் கயிறு !!!

கனவே.....

கனவே ....
படைப்பாளிக்கு நீ
பாலுட்டும் தாய்
உழைப்பாளிக்கு நீ
வாலாட்டும் நாய்
ஏழைக்கு நீ
நிரந்தர நண்பன்
கோழைக்கு நீ
நித்திரையில் நண்பன்
இளமைக்கு நீ காட்டாறு
முதுமைக்கு நீ தெளிந்த நீரோடை
இப்படி எல்லோர் வாழ்விலும்
ஏதோ ஒரு பரிமாணமாய் கலந்த நீ !
எனக்கு மட்டும் ........
என் வாழ்வையே உனதாக்கி விட்டாயே !!
வெறும் கனவாக்கி விட்டாயே ...

Sunday 25 July 2010

தேடல்

சின்னஞ் சிறு அறை
சுற்றிலும் இருட்டு
சுவாசிக்க வழியில்லை
சுவாசிக்கவும் தோன்ற வில்லை
எங்கும் நிசப்தம்
தனிமையைத் தவிர
வேறு துணை இல்லை
ஆனாலும் பயமேதும் அறிய வில்லை
உண்ணவழியில்லை
ஆனால் பசி அறியவில்லை
உறங்க வசதியில்லை
ஆனாலும் உறக்கத்தை தவிர
வேறு சிந்தையில்லை
உடுத்த உடையில்லை
அது பற்றி கவலையில்லை
இந்த நிலை என்று மாறும்
என்ற ஏக்கம் என்றும் இல்லை
அழுதோ சிரித்தோ பழகவில்லை
அதையும் தாண்டி ஒரு மோனநிலை !
சட்டென்று ஒரு கணத்தில்
விழியை ஒளியும்
செவியை ஒலியும்
நாசியை சுவாசமும் தீண்ட ...
அழுது கொண்டே விழுகிறேன்
வாழ்க்கை பள்ளத்தில் ..
விழுந்து கொண்டே தேடுகிறேன் ....

எங்கே அந்த சின்னஞ் சிறு அறை ??!!...
என் தாயின் கருவறை !






Thursday 10 June 2010

இணையதளத்தில்சுருங்கியது உலகம் மட்டும் அல்ல !! மனிதமும் தான்
உள்ளமெனும் பொற் பாயில் ஒரு கோடி நல் முத்தை பரப்பி வைத்தே
கள்ளமிலாஎண்ணக் கரங்களினால் ஒவ்வொன்றாய் எடுத்துக் கோர்த்தேன்
வெள்ளமெனப் பாய்ந்து வந்த விதிக் கனலில் கை சுடவே அத்தனையும் போட்டு விட்டேன் ......... பழி என் மீதோ ?